முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்டத்தில் வினேஷ் போகத்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Vinesh-Phogat 2024 08 08

Source: provided

பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தொடர்ந்து தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பஞ்சாப் - அரியானாவின் ஷம்பு எல்லையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடங்கி நேற்றுடன் 200 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி அங்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு விவசாயிகள் சார்பாக வாள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

___________________________________________________________________________

பேட் கம்மின்ஸ் கருத்து

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது.  ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இருப்பினும் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக நாங்கள் வென்று நீண்ட காலங்கள் ஆகிவிட்டது. இது (பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024/25) நம்பிக்கையுடன் அதை திருத்தம் செய்ய வேண்டிய நேரம் என ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்த கடந்த 2 தொடர்களில் நாங்கள் வெற்றிகரமாக செயல்படவில்லை. எனவே இங்கே இந்தியாவுக்கு எதிராக வென்று நீண்ட காலங்கள் ஆகிவிட்டது. இது நம்பிக்கையுடன் அதை திருத்தம் செய்ய வேண்டிய நேரம். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக பல முறை விளையாடியுள்ளோம். அவர்கள் எங்களை பலமுறை தோற்கடித்துள்ளனர். நாங்களும் அவர்களுக்கு எதிராக நிறைய வெற்றிகளை பெற்றுள்ளோம். 10க்கு 10 அடிப்படையில் நான் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என இந்தியாவை எச்சரிக்கும் விதமாக கம்மின்ஸ் கூறியுள்ளார்.

___________________________________________________________________________

அரையிறுதிக்கு நிதிஷ் முன்னேற்றம்

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நிதிஷ் குமார், தாய்லாந்து வீரர் மோங்கான் பன்சன் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் நிதிஸ்குமார் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 21-13, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  

___________________________________________________________________________

ஜடேஜா, ரெய்னாவுக்கு புகழாரம்

உலகின் மிகச் சிறந்த ஃபீல்டிங் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். ரவீந்திர ஜடேஜாவைப் போன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சிறப்பான ஃபீல்டர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் பேசியதாவது: சுரேஷ் ரெய்னாவின் மிகப் பெரிய ரசிகன் நான். அவர் கிரிக்கெட் விளையாடிய நாள்களை மகிழ்ச்சியுடன் பார்த்தேன். தற்போது அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த காலங்களில் இந்தியாவில் கிரிக்கெட் உள்கட்டமைப்புகள் பெரிய அளவில் இல்லை. சுரேஷ் ரெய்னா மிகச் சிறந்த ஃபீல்டர். அவர் போட்டியின்போது அருமையாக ஃபீல்டிங் செய்வார். பந்துகளை டைவ் அடித்து பிடிப்பார்.

ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னாவைக் காட்டிலும் ஃபீல்டிங்கை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். அவர் டைவ் அடிக்க மாட்டார். ஆனால், பந்துகளை மிகவும் வேகமாக ஓடிச் சென்று தடுப்பதில் வல்லவர். பந்துகளை எடுத்து எறிவதில் ரிக்கி பாண்டிங்கை போன்று துல்லியமாக செயல்படக் கூடியவர். பவுண்டரி லைன், உள்வட்டத்தில் ஃபீல்டிங் என அனைத்து இடங்களிலும் சிறப்பாக ஃபீல்டிங் செய்பவர். ஃபீல்டிங்கில் அவர் முழுமையான ஆல்ரவுண்டர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து