எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மலையாள சினிமா படப்பிடிப்பின் போது கேரவனுக்குள் ரகசிய கேமரா வைத்து படம் பிடிக்கிறார்கள் என்று நடிகை ராதிகாவிடம் தெரிவித்தது தொடர்பாக கேரள சிறப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
மலையாள திரை உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பாலியல் வன்முறைகள் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகிலும் உள்ளது.
ஒரு மலையாள படப்பிடிப்பின்போது அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து செல்போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதுபற்றி கூட்டத்தில் தமிழ் தெரிந்த ஒருவரிடம் விசாரித்தபோது கேரவனில் ரகசியமாக கேமராவை வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை படம் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.இதையடுத்து கேரவன் ஆட்களை அழைத்து கேரவனுக்குள் கேமரா வந்தால் செருப்பால் அடிப்பேன் என எச்சரித்தேன். தொடர்ந்து நான் கேரவனை பயன்படுத்துவதில்லை. ஓட்டலுக்கு சென்று விடுவேன் என கூறினார்.
ராதிகா சரத்குமாரின் பேட்டி திரை உலகம் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி கேரள அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டனர். தொடர்ந்து கேரவனுக்குள் ரகசிய கேமரா பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பிய ராதிகாவிடம் விசாரிக்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ராதிகாவை தொலைபேசியில் கேரள போலீசார் தொடர்பு கொண்டு கேரவனுக்குள் ரகசிய கேமரா பயன்படுத்தப்பட்ட சம்பவம் பற்றி விசாரணை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |