Idhayam Matrimony

நடிகர் தர்ஷன் விவகாரம்: கர்நாடகா சிறையில் கைதிகள் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2024      சினிமா
Darshan 2024-06-22

Source: provided

பெங்களூரு : நடிகர் தர்ஷனுக்கு சிறைக்குள் சிகரெட் வழங்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, தங்களுக்கும் சிகரெட் வழங்க வேண்டும் என்று ஹிண்டலகா மத்திய சிறையில் கைதிகள் போராட்டம் நடத்தினர்.

ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நாற்காலியில் அமர்ந்து சிகரெட்டுடன் தேநீர் அருந்துவது போன்ற அவரது புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.

நடிகர் தர்ஷனின் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிறைக் கைதிகளையும் விட்டுவைக்கவில்லை. கர்நாடக மாநிலம், பெலகாவியில் உள்ள ஹிண்டலகா மத்திய சிறையில் உள்ள கைதுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகரெட் மற்றும் புகையிலை பொருள்கள் கேட்டு போராட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சிகரெட் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்கும் வரை போராடுவோம் எனத் தெரிவித்த கைதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை உணவை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. 

ஹிண்டலகா மத்திய சிறையில் போதைப் பொருள்கள் புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, பெலகாவி காவல் ஆணையர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, சுமார் 200 காவலர்கள் கொண்ட குழுவுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த சோதனையில், கைதிகள் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருள்கள், சிகரெட் மற்றும் சிறைக்குள் அங்கீகரிக்கப்படாத சில பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து