முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா தேர்தலில் காங்., சார்பில் களமிறங்குகிறார் வினேஷ் போகத்?

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2024      இந்தியா      அரசியல்
Rahul 2024-09-04

புதுடெல்லி, அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில்  வினேஷ் போகத் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உற்சாக வரவேற்பு...

பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தொடர்ந்து தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி... 

வருகிற அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வருகிற அரியானா தேர்தலில் வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா சந்தித்திருப்பது பேசு பொருளாகியுள்ளது. ராகுல் காந்தியை சந்தித்த பின்னர் இருவரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலை அவரது இல்லத்தில் சந்திந்தனர். இவர்களுடைய சந்திப்பு அரசியல் கட்சிகள் இடையே மேலும் பேசு பொருளாகியுள்ளது.

ஒரேகட்டமாக... 

அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து