எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜயவாடா : நடிகர் அல்லு அர்ஜூன் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு முதல்வரின் நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸா இடையே வங்கக்கடலில் கடந்த வியாழக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. இதன் காரணமாக ஆந்திரம், தெலங்கானாவில் கடந்த மூன்று நாள்களாக கனமழை நீடித்து வருகிறது. இரு மாநிலங்களிலும் இதுவரை மழை வெள்ளத்தில் 35 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மழை வெள்ளத்தில் 4,15,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரத்தில் 43,417 பேர் மாநிலம் முழுவதும் உள்ள 163 நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 197 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வரின் வெள்ள நிவாரண நிதியாக ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் மகேஷ் பாபு இருவரும் தனித்தனியே 1 கோடி ரூபாய் வழங்கியுள்ள நிலையில் தற்போது அல்லு அர்ஜூனும் ரூ. 1 கோடி வழங்குவதாகக் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி நடிகர் அல்லு அர்ஜூன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சவாலான சூழலில் இரு மாநில முதல்வர்களில் நிவாரண பணிக்களுக்கு ஆதரவாக நிவாரண நிதி ரூ. 1 கோடி வழங்குகிறேன். அனைவரின் பாதுகாப்புக்காகவும் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |