எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு எறிதல் எப். 46 பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் எறிந்து 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்ற சச்சின் சர்ஜிராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாரா ஒலிம்பிக் தொடரில் வலிமையுடன் செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த சச்சின் சர்ஜிராவுக்கு வாழ்த்துகள்.அவரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. என தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்று 19-வது இடத்தில் உள்ளது.
________________________________________________________________
போபண்ணா ஜோடி ஏமாற்றம்
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட்-டொனால்ட் யங் ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
________________________________________________________________
இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இந்தியா இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என 21 பதக்கம் வென்றுள்ளது. இந்நிலையில், குண்டு எறிதலில் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சச்சின் சர்ஜியாரோ கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவர் மொத்தம் 16.32 புள்ளிகள் எடுத்து 2வது இடம் பிடித்தார். இதன்மூலம் பாரா அதலெட்டிக்கில் இந்தியா 11பதக்கங்களைப் பெற்றுள்ளது.கனடா வீரர் தங்கப் பதக்கமும், குரோசிய வீரர் வெண்கலமும் வென்றார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
________________________________________________________________
பாரா ஒலிம்பிக்கில் சாதனை
பிறக்கும் போதே, ' குரங்கு', ' மென்டல்' என உறவினர்களின் விமர்சனத்திற்கு உள்ளான தீப்தி ஜிவன்ஜி, பாரிசில் நடக்கும் பாரா ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளதுடன் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார். ஒருவர் நம்பிக்கையுடன் முயற்சித்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை பாரிசில் நடக்கும் பாரா ஒலிம்பிக் தொடர் உலகத்திற்கு எடுத்துக்காட்டி வருகிறது. தடகள வீராங்கனைகள், பல்வேறு தடைகளை தாண்டி ஏராளமான சாதனைகளை படைத்து வருகின்றனர். அதில் ஒருவர் இந்தியாவின் ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த தீப்தி ஜிவன்ஜி.
பிறந்தது முதல் பல்வேறு தடைகளை சந்தித்த அவர், அதில் மனம் தளராமல் போராடி, 400 மீ., ஓட்டத்தில் 55.82 வினாடிகளில் இலக்கை கடந்து வெண்கலம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த 21வது வெண்கலம் ஆகும். இதற்கு முன்னர் ஜப்பானில் நடந்த உலக தடகள பாரா சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்து இருந்தார். பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இவருக்கு நாடு முழுவதும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |