Idhayam Matrimony

காதலியுடன் நேரம் செலவிட சம்பளத்துடன் விடுமுறை: தாய்லாந்து நிறுவனம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      உலகம்
Lovers-2024-09-05

பாங்காக், தாய்லாந்து மார்க்கெட்டிங் கம்பெனி, தங்கள் ஊழியர்கள் காதலியுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதற்கு வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுப்பை அறிவித்துள்ளது. ஊழியர்கள் இணையத்தில் பகிர்ந்த இந்த செய்தி, காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

தாய்லாந்து, பாங்காக்கில் மார்க்கெட்டிங் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்களில் ஒருவர், எப்போதும் மிகவும் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். டின்னர் சாப்பிட கூட ஒன்றாக வெளியே போக முடியவில்லையே என தனது கஷ்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த தகவல் முதலாளி வரை சென்று விட்டது. இதையடுத்து அந்நிறுவனம் ஊழியர்களின் நலனை மேம்படுத்தவும், ஊழியர்களை குஷிப்படுத்தவும் பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. 

ஊழியர்கள், காதலியுடன் நேரம் செலவிட வசதியாக, சம்பளத்துடன் லீவு வழங்கப்படும் என்று முதல் அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. மேலும்  தேவையான நாட்கள் லீவு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. 

 உங்கள் நலனே எங்கள் நலன்.  நீங்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் தான் நிறுவனத்தில் வேலை நன்றாக நடக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து