எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை: இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக வருமான வரி செலுத்துவோரின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் விராட் கோலி முதலிடத்திலும், டோனி 2-வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 3-வது இடத்தில் உள்ளனர்.
டோனி ரூ.38 கோடி...
இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக தொகையை வருமான வரியாக செலுத்துவோரின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி ரூ.66 கோடி வருமான வரி கட்டி வருவதாகவும், சிஎஸ்கே ஜாம்பவான் டோனி ரூ.38 கோடியை கட்டி வருவதும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம் அணிக்கு....
இந்தியா கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 2 வாரங்களில் ஹோம் சீசன் தொடங்கவுள்ளது. வங்கதேசம் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மூலமாக இந்திய அணி ஹோம் சீசனை தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பலரும் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
கோலி முதலிடத்தில்...
இந்த நிலையில் இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக வருமான வரி செலுத்துவோரின் பட்டியலை ஃபார்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். அவர் மொத்தமாக வருமான வரியாக மட்டும் ரூ.66 கோடி கட்டி வருகிறார். அதேபோல் 2-வது இடத்தில் 2020-ம் ஆண்டிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் டோனி இருந்து வருகிறார்.
3-வது இடத்தில்....
அவர் வருமான வரியாக மட்டும் ரூ.38 கோடி கட்டி வருகிறார். இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 3-வது இடத்தில் இருக்கிறார். அவர் மொத்தமாக ரூ.28 கோடியை வருமான வரியாகவும், இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ரூ.23 கோடி வருமான கட்டுவதன் மூலமாக 4-வது இடத்திலும் இருக்கிறார். அதேபோல் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ரூ.13 கோடியை வருமான வரியாகவும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ரூ.10 கோடியையும் வருமான வரியாக கட்டி வருகிறார். அதேபோல் சினிமா நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது விராட் கோலி 5-வது இடத்திலும், டோனி 7-வது இடத்திலும் இருக்கின்றனர். இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாப் 20 இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |