முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐசிசியின் சிறந்த வீரர் விருது:பரிந்துரை பட்டியலில் 3 பேர்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      விளையாட்டு
5-Ram-52

Source: provided

துபாய்: ஐசிசியின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி நேற்று (செப்டம்பர் 5) வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் மூவரை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை ஐசிசி வழங்கி வருகிறது.

ஆல்ரவுண்டர்...

ஐசிசியின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ், மேற்கிந்தியத் தீவுகள் வேகப் பந்துவீச்சாளர் ஜேடன் சீல்ஸ் மற்றும் இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் துனித் வெல்லாலகே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை தென்னாப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் வென்றுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால், அவர் தற்போது ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய அவர், 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

ஜேடன் சீல்ஸ்...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், ஜேடன் சீல்ஸ் ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜேடன் சீல்ஸ் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கயானாவில் நடைபெற்ற போட்டியில் மட்டும் அவர் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

துனித் வெல்லாலகே...

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட துனித் வெல்லாலகே ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார். இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட துனித் வெல்லாலகேவுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. மூன்று போட்டிகளிலும் துனித் வெல்லாலகே முறையே 67 ரன்கள், 39 ரன்கள் மற்றும் 2 ரன்கள் எடுத்தார். அதேபோல மூன்றாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் உள்பட துனித் வெல்லாலகே மொத்தமாக 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து