முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துலிப் கோப்பை கிரிக்கெட்: முதல் நாளில் இந்தியா பி அணி 202/7

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      விளையாட்டு
5-Ram-53

Source: provided

பெங்களூரு: நட்சத்திர வீரர்கள்...

துலிப் கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் உள்ள கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் தவிர மற்ற அனைத்து நட்சத்திர வீரர்களும் கலந்து கொண்ட டெஸ்ட் தொடர் போன்றே விளையாடி வருகின்றனர். செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதுவதால் துலிப் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து அவுட்...

இந்நிலையில், இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கியது. ஏ அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், பி அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் மோதினர். டாஸ் வென்ற ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், அபிமன்யு களமிறங்கினர். அபிமன்யு 13 ரன், ஜெய்ஸ்வால் 30 ரன், சர்ப்ராஸ் கான் 9 ரன், ரிஷப் பண்ட் 7 ரன், சாய் கிஷோர் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகினர்.

202 ரன்கள்...

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய முஷீர் கான் சதம் விளாசி அசத்தினார். 8-வது விக்கெட்டுக்கு முஷீர் கான், நவ்தீப் சைனி ஜோடி108 ரன்கள் சேர்த்துள்ளது. முதல் நாள் முடிவில் இந்தியா பி 79 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. முஷீர் கான் 105 ரன்னும், நவ்தீப் சைனி 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்தியா ஏ அணி சார்பில் ஆவேஷ் கான், கலீல் அகமது, ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

அக்ஷர் படேல்... 

இந்நிலையில் இந்தியா சி மற்றும் இந்தியா டி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கியது. சி அணியின் கேப்டனாக ருதுராஜ்-ம் டி அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரும் மோதினர். இதில் டாஸ் வென்ற சி அணியின் கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி டி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அதர்வா டைட், யாஷ் தூபே களமிறங்கினர். இருவரும் முறையே 4 மற்றும் 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 9, தேவ்தத் படிக்கல் 0, ரிக்கி புய் 4, ஸ்ரீகர் பரத் 13, சரனேஷ் ஜெய்ன் 13, ஹர்சித் ரானா 0 என ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் கடுமையாக போராடிய அக்ஷர் படேல் அரை சதம் விளாசினார். கடைசியில் 86 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா டி அணி 48.3 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சி அணி தரப்பில் வைஷாக் 3 விக்கெட்டும் அனுஷ் காம்போஜ் ஹிமான்ஷு சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து