Idhayam Matrimony

வரி ஏய்ப்பு விவகாரம்: குற்றத்தை ஒப்புக் கொண்ட ஜோபைடன் மகன்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      உலகம்
Hunter-Biden 2024-09-06

வாஷிங்டன், ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். 

ஹண்டர் பைடனின் இந்த செயல், அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மற்றும் அதிபர் பைடனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.  54 வயதான ஹண்டர் பைடன் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். குற்றத்தை ஒப்புக் கொண்டால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கும் சூழல் உருவாகலாம் என்று ஹண்டர் பைடன் இவ்வாறு செய்ததாக தெரிகிறது.

இது தொடர்பான வழக்கில் அமெரிக்க மாவட்ட நீதிபதி மார்க் ஸ்கார்சி டிசம்பர் 16-ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதில் ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து