Idhayam Matrimony

டிரம்புக்கு தான் ஓட்டு போடுவேன்: ஒபாமாவின் சகோதரர் திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      உலகம்
Obama 2024-09-06

வாஷிங்டன், ஜனநாயக கட்சியை சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஒன்றுவிட்ட சகோதரர், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கு ஓட்டளிப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளதால் அங்கு பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்குகிறார்.

இருவருக்கும் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் (ஜனநாயக கட்சி) ஒன்றுவிட்ட சகோதரர் மாலிக் ஒபாமா, டிரம்புக்கு தான் ஓட்டளிப்பேன் என அறிவித்துள்ளார். 

இது குறித்து மாலிக் ஒபாமா, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள  பதிவில், நான் மாலிக் ஒபாமா. குடியரசு கட்சிக்காரனாக பதிவு செய்கிறேன். அதிபர் டிரம்புக்கு நான் ஓட்டளிக்கிறேன் எனக் கூறியுள்ளார். 

அவர் டிரம்புக்கு ஆதரவாக மாலிக் பேசுவது இது முதன்முறையல்ல. 2016 தேர்தலிலும் டிரம்புக்கு ஓட்டளிப்பதாகவும், டிரம்பின் கொள்கைகளை ஆதரிப்பதாகவும் கூறினார்.

பராக் ஒபாமாவின் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் இந்த மாலிக் ஒபாமா. கென்யாவில் பிறந்திருந்தாலும் அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளார். முன்பு கென்யாவில் தன் தந்தை பிறந்த மாவட்டமான சியாயா கவர்னர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால், அவர் ஒரு சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றிருந்தார்.

பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அவரை பார்க்க வெள்ளை மாளிகைக்கும் சென்றுள்ளார். அதற்கிடையே பராக் எச். ஒபாமா அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை துவங்கிய மாலிக், அதனை பதிவு செய்ய தவறி விட்டதுடன் பல்வேறு சிக்கல்களையும் சந்தித்தார். அதில் பராக் ஒபாமா தனக்கு உதவவில்லை என்பதால் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  பராக் ஒபாமாவுக்கு எதிராக திரும்பியதுடன் எதிர்க்கட்சியில் இருக்கும் டிரம்பை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து