எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து விட்டு முறைப்படி அக்கட்சியில் இணைந்தனர்.
அரியானா தேர்தலுக்கு முன்பாக மல்யுத்த வீரர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்ற ஊகங்கள் நிலவி வந்த நிலையில் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து விட்டு முறைப்படி அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
முன்னதாக வீரர்கள் இருவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடந்த 4-ம் தேதி டெல்லியில் சந்தித்தனர். இது தொடர்பான புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வினேஷ்போகத் இந்திய ரயில்வே பணியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் இந்திய ரயில்வேயில் பணியாற்றியது என் வாழ்க்கையின் பெருமையான, மறக்கமுடியாத தருணமாகும் என்று தெரிவித்திருந்தார்.
அரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவும், அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |