எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இணையவழியில் பேருந்து இருக்கைகள் முன்பதிவு மேற்கொள்வது தொடர்பாக கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு போக்குவரத்துத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாக நாள்தோறும் சராசரியாக 2.500-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். தொலைதூர மற்றும் புறநகர் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in அல்லது tnstc செயலியை பயன்படுத்துகின்றனர்.
பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாக இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 150 புதிய சொகுசு பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்நிலையில், இணையதள முன்பதிவு திட்டத்தை அதிகளவிலான மக்கள் பயன்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். தங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |