முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

34 ஆண்டுக்கு முன் ரூ. 20 லஞ்சம் வாங்கிய வழக்கு: முன்னாள் போலீஸ்காரரை கைது செய்ய கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      இந்தியா
Jail

Source: provided

பாட்னா : பீகாரில் 34 ஆண்டுக்கு முன் 20 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், முன்னாள் போலீஸ்காரரை கைது செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1990-ம் ஆண்டு மே 6-ம் தேதி பீகாரில் உள்ள சஹர்சா ரயில் நிலையத்தில் போலீஸ்காரர் சுரேஷ் பிரசாத் சிங் பணியில் இருந்துள்ளார். பிளாட்பாரத்தில் கடை போடுபவர்களிடம் லஞ்சம் வாங்குவது இவரது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

அப்போது சீதாதேவி என்ற பெண், ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் காய்கறி மூட்டைகளை தூக்கி சென்று கொண்டிருந்த போது, வழிமறித்த சுரேஷ் பிரசாத் சிங் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். பயந்து போன அந்த பெண், புடவையில் முடிந்து வைத்திருந்த 20 ரூபாயை எடுத்து கொடுத்துள்ளார்.

சுரேஷ் பிரசாத் அதை வாங்கி பாக்கெட்டில் வைத்தபோது, கையும் களவுமாக பிடிபட்டார். இது தொடர்பாக, நீதிமன்றத்தில் 34 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. 

நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் போது தான் இந்த வழக்கு, நீதிபதியின் கவனத்துக்கு வந்துள்ளது. ஆவணங்களை பார்வையிட்ட சிறப்பு விஜிலென்ஸ் நீதிபதி சுதேஷ் ஸ்ரீவஸ்தவா, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் போலீஸ்காரர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதையும், அதனால் தான் வழக்கு தாமதம் ஆவதையும் கண்டறிந்தார். 

தலைமறைவான முன்னாள் போலீஸ்காரர் சுரேஷ் பிரசாத் சிங்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த டி.ஜி.பி.,க்கு நீதிபதி உத்தரவிட்டார்.  இந்த வழக்கில் ஜாமின் பெற்ற சுரேஷ் பிரசாத் சிங், வழக்கில் இருந்து தப்பிக்க போலியான முகவரியும் கொடுத்திருக்கிறார் என்பது இப்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து