Idhayam Matrimony

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி மாஜி முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      இந்தியா
Sandeep-Ghosh 2024-08-25

Source: provided

கொல்கத்தா : கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் அமலாக்க துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். 

கடந்த மாதம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறது. 

இதற்கிடையே சந்தீப் கோஷ் மற்றும் அவரது பெலியாகட்டா வீடு உட்பட அவரது மூன்று கூட்டாளிகளுக்கு தொடர்புடைய இடங்களிலும், ஹவுரா மற்றும் சுபாஸ்கிராமில் உள்ள இரண்டு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். 

மருத்துவமனையின் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பிரசூன் சாட்டர்ஜியின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், 

சந்தீப் கோஷ் தனது பதவிக் காலத்தில் மருத்துவமனையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சி.பி.ஐ) கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை பணமோசடி வழக்கை பதிந்து, அவரது சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது. முக்கிய எலக்ட்ரானிக் ஆதாரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து