எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான வழக்குகளை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2006-11 காலகட்டத்தில் தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த சாத்துார் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக 44.56 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.
அதே போல், 2006-2011ல் வருமானத்துக்கு அதிகமாக ரூ.76 லட்சம் சொத்து சேர்த்ததாக தங்கம் தென்னரசு மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, அறிக்கையை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், வழக்கில் இருந்து இவர்களை விடுவித்து, சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன.
இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கைகளை விசாரணைக்கு எடுத்தார். அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்து, ஸ்ரீவில்லிபுத்துார் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, மீண்டும் விசாரணை நடத்தவும், விசாரணையை தினமும் நடத்தி விரைவில் முடிக்கவும் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, அமைச்சர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் அமைச்சர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், எதிர் மனுதாரர்கள் 4 வாரத்தில் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |