Idhayam Matrimony

காவல் ஆய்வாளர் மீது நில அபகரிப்பு புகார்: சென்னையில் 5 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      தமிழகம்
CBI 2023 06 07

சென்னை, நீலாங்கரையில் நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக, காவல் ஆய்வாளர் தொடர்புடையை 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சோழிங்கநல்லூரில் கார்த்திக் என்பவர் தனக்குச் சொந்தமான 18.25 சென்ட் நிலத்தை கோபாலகிருஷ்ணன் என்பவர் சட்டவிரோதமாக அபகரித்துள்ளார் என்றும், இதை தடுக்க முயன்ற போது ரவுடிகளை வைத்து மிரட்டல் விடுத்ததாகவும், எனவே, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், நிலத்தை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

அந்தவகையில், நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்ததாக நீலாங்கரை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஆனந்தபாபு தொடர்புடைய 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று (செப்.6) சோதனை நடத்தினர். சென்னை அண்ணாநகர் காவலர் குடியிருப்பில் உள்ள ஆனந்தபாபு வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து சாஸ்திரி நகரில் வசித்து வரும் ஹரிணி என்பவரது வீட்டிலும், பெசன்ட்நகர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு தொடர்புடைய 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து