முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருப்புக்கோட்டை அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய கழக செயலாளர் யோகா இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் எடப்பாடியார்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      தமிழகம்
EPS 2024-09-06

Source: provided

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய கழக செயலாளர் யோகா இல்ல திருமண வரவேற்பு விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

அருப்புக்கோட்டை அதிமுக தெற்கு  ஒன்றிய கழக செயலாளர் யோகா இல்ல திருமண வரவேற்பு விழா  ஆத்திபட்டியில் உள்ள அம்மா அரங்கத்தில்  நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை யோகா. அஜய் வாசுதேவன் -காவியா திருமணம்  கமுதி ஸ்ரீ கோட்டை முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியில்  அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியில் அம்மா அரங்கில்  முன்னாள் முதல்வர் அ.தி.மு.க கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி   மணமக்கள் அஜய் யோக.வாசுதேவன் -காவியாவை  பூ கத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். 

மணவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது., கடந்த பாராளுமன்ற தேர்தலில் நெருக்கடியான காலத்திலும் அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் அதிக வாக்குகள் பெற்று தந்தவர் ஒன்றிய செயலாளர் யோக வாசுதேவன் அவருக்கும், அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் அவர் மனைவி ராஜேஸ்வரி ஆத்திபட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். அவரும் அப்பகுதி மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்ற அனைவரும் செயல்பட வேண்டும்.  இன்று மணவிழா காணும் தம்பதியினர் எல்லா செல்வங்களையும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறேன் என்று பேசினார். முன்னதாக விருதுநகர் மாவட்ட எல்லையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் கிழக்கு மாவட்ட அண்ணா திமுக செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றனர்.

வரவேற்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள்  திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் கடம்பூர் ராஜு,கே.டி. ராஜேந்திர பாலாஜி,  மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராஜா வர்மன் ராஜன் செல்லப்பா முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். . திருமண வரவேற்பு விழாவில் அண்ணா திமுக தலைமை கழக நிர்வாகிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாநில, மாவட்ட, நகர ,ஒன்றிய, கிளைக் கழக அண்ணா திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆத்திபட்டி ஊராட்சி பகுதி கிராம பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள் பல்லாயிரக்கணக்கானோர்  கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.. திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மிகப் பிரமாண்டமான அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிறைவாக யோக வாசுதேவன் ராஜேஸ்வரி குடும்பத்தார் திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து