எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா, பெலாரசின் அரினா சபலென்கா உடன் நாளை மோத உள்ளார்.
ஜெசிகா பெகுலா....
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக்குடியரவின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 1-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஜெசிகா பெகுலா, ஆட்டத்தின் அடுத்தடுத்த செட்களை 6-4, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் இந்த ஆட்டத்தில் 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை (8ம் தேதி) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா, பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோத உள்ளார்.
சபலென்கா வெற்றி...
மற்றொரு பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் எம்மா நவரோ உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |