முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஜனாதிபதி முர்முவுக்கு மசோதாவை அனுப்பி வைத்தார் மே.வங்க கவர்னர்

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      இந்தியா
Mamta-Ananda-Pose

கொல்கத்தா, மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவை ஜனாதிபதியின்  பரிசீலனைக்கு அம்மாநில கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில், பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு வழி வகை செய்யும் அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மசோதா கடந்த 3-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் மசோதாவுக்கான சட்ட அறிக்கையை அரசு அனுப்பி வைக்கவில்லை என்று தெரிகிறது. இது குறித்து கவர்னர் மாளிகை அதிகாரி கூறுகையில், விதிமுறைகளின்படி மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவு எடுப்பதற்கு முன் சட்ட அறிக்கையை மாநில அரசு அனுப்பி வைப்பது கட்டாயமாகும்.

ஆனால் தொழில்நுட்ப அறிக்கைகளை அரசு நிறுத்தி வைப்பதும், மசோதாக்களை நிறைவேற்றவில்லை என்று கவர்னர் மீது குற்றம்சாட்டுவதும் இது முதல் முறை அல்ல. இதுபோன்ற முக்கியமான விவகாரங்களில் நடைமுறைகளை பின்பற்ற தவறியதற்காக மாநில அரசை கவர்னர் கடிந்துகொண்டுள்ளார். 

அபராஜிதா மசோதா ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட இதே போன்ற மசோதாக்களின் நகல் போல் தெரிகிறது என கவர்னர் சுட்டிக்காட்டினார் என்று தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே கவர்னர் ஆனந்த போஸ் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து