முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் புகாருக்கு உள்ளான நபர் 5 ஆண்டுகள் நடிக்க தடை : தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      சினிமா
Actor-Sangham 2024 08 14

Source: provided

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க 68-வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில்    நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது.  இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான திரைக்கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாலியல் புகாருக்கு உள்ளான  நபர் 5 ஆண்டுகள் நடிக்க தடை விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறுகையில்,

 பொதுக்குழு மகிழ்ச்சியாக நடந்துள்ளது. சங்கர தாஸ் சுவாமிகள் பெயரில் டெல்லி கணேஷ், விஜயகுமாரி, 10 நாடக கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது. கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது  என்றார். 

நடிகைகளுக்கு பாலியல் புகார் குறித்து நடிகை ரோகிணி கூறுகையில்,

2019-ம் ஆண்டிலேயே கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகை மட்டும் இன்றி யாரும் புகார் கொடுக்கலாம். வழக்கறிஞர், என்.ஜி.ஓ. கமிட்டியில் உள்ளனர். புகார் தெரிவிக்க எண் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும். பெண் உறுப்பினர்களுக்கு புகார் எண், எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்படும். 

புகாருக்கு உள்ளான  நபர் 5 ஆண்டுகள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து வெளியே தெரிவிக்கப்படாது. எந்த பெண்ணும் பயத்துடன் இருக்கக்கூடாது.எந்த நடிகையும் தைரியமாக புகார் கூறலாம்.

நடிகை மீதான புகார் பெரிதுபடுத்தப்படுகிறது. நடிகை கூறும் புகார் மட்டும் திரும்ப திரும்ப பேசப்படுகிறது. எல்லா துறையிலும் அத்துமீறல் இருக்கிறது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து