முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐநா பொதுச் சபையில் பிரதமர் மோடியின் உரை கிடையாது : உத்தேச பட்டியல் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      உலகம்
UNO-2023 04 06

Source: provided

வாஷிங்டன் : ஐ.நா. சபை வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட பேச்சாளர் பட்டியலில்  பிரதமர் மோடியின் பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 28-ம் தேதி உரையாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் 79-வது அமர்வின் பொது விவாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த அமர்வில், ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ கட்டரஸ் ஆண்டறிக்கையை தாக்கல் செய்வார். 

அதைத் தொடர்ந்து, 79-வது அமர்வில் தலைவர் என்கிற முறையில் பிரேசில், உயர்மட்ட விவாதத்தை தொடங்கி வைக்கும். அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றுவார். இது, அதிபராக ஜோ பைடனின் கடைசி ஐ.நா. பொது சபை உரையாக இருக்கும். இதில் பிரதமர் மோடி வரும் 26-ம் தேதி உரையாற்றுவார் என கடந்த ஜூலை மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், திருத்தப்பட்ட பேச்சாளர் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 28-ம் தேதி உரையாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக நியூயார்க்கில் இந்திய வம்சாளியினர் ஏற்பாடு செய்துள்ள பிரமாண்ட கூட்டத்தில் வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுவார் அதே போல, 22, 23-ம் தேதிகளில் ஐ.நா.வின் எதிர்கால மாநாட்டிலும் அவர் பேசுவார் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து