முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிர சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் பா.ஜ.க. போட்டி?

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      இந்தியா
BJP 2023 04 10

மும்பை, மகராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 140 முதல் 150 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மஹாராஷ்டிராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 287 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் தற்போது பா.ஜ.க. -சிவ சேனா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி வகிக்கிறார். எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.  லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பாதியில் விட்ட ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன. அதே நேரத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க., தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி உள்ளது. இதன்படி, பா.ஜ.க. 140 முதல் 150 வரை தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டே தரப்பு 80 தொகுதிகளிலும், அஜித்பவார் 55 தொகுதிகளிலும் போட்டியிடக்கூடும் எனவும், சிறிய கட்சிகளுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து