முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அரசு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: விழுப்புரத்தில் திருமாவளவன் பேட்டி

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      தமிழகம்      அரசியல்
Thirumavalavan 2023-09-26

விழுப்புரம்,  தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி தி.மு.க. அரசு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார். 

விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பீகார், குஜராத் மாநிலங்களில் மதுவிலக்கு இருக்கும்போது தமிழ்நாட்டில் ஏன் இருக்கக்கூடாது?. அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கில் உடன்பாட்டுடன் இருக்கும் நிலையில் கடைகளை மூடுவதில் என்ன சிக்கல் இருக்கிறது?. மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக இருக்க வேண்டும். 

மது ஒழிப்பு மாநாட்டை கூட்டணிக் கணக்குடன் இணைத்துப் பார்க்க வேண்டாம். மது ஒழிப்பு மாநாட்டில் லட்சக்கணக்கான மகளிரை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். விடுதலை சிறுத்தை கட்சி மாநாட்டில் கட்சிகள் வரம்புகளை கடந்து அனைவரும் ஒரே குரலில், ஒருமித்த குரலில் ஜனநாயக அடிப்படையில் கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும். தேர்தலுக்கான அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. 24 மணி நேரமும் கட்சி சார்ந்த நிலைப்பாட்டை எடுக்க முடியாது.

தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மது விலக்கை ஆதரிக்கின்றன. மதுவிலக்கு கோரிக்கையை தி.மு.க. அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கு என்பது தி.மு.க.விற்கும் உடன்பாடான கருத்துதான். மதுவிலக்கு விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம். தி.மு.க.விற்கு முரணான கருத்தை நாங்கள் சொல்லவில்லை. மக்களின் கோரிக்கையை நான் முன்வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து