Idhayam Matrimony

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      விளையாட்டு
INDIA 2024-09-11

Source: provided

ஹூலுன் பியர் : ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா 8 கோல்கள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியா தற்போது ஒன்பது புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

ரவுண்டு ராபின்...

8-வது ஆசிய சாம்பி யன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன் பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 நாடுகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி 16-ந் தேதியும், இறுதிப் போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.

8-1 என்ற கணக்கில்...

இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் வீழ்த்தியது.இந்திய அணி 3-வது ஆட்டத்தில் நேற்று மலேசியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்திலும் இந்தியா அணி 8-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக மலேசியா முதல் ஆட்டத்தில் 2-4 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்தியா தனது நான்காவது போட்டியில் இன்று கொரியாவை எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து