எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியை ஆப்கானிஸ்தான் சார்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பம் முதலே மழைக் குறுக்கிட்டதால் டாஸ்கூட போடமுடியாத நிலை ஏற்பட்டது.
3 நாள்கள் ஆன பின்பும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தப் போட்டி முழுமையாக ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை மழை குறைந்தால் நாளை 98 ஓவர்களுடன் 4-வது நாள் தொடங்கும். ஆனால், மழையின் தீவிரம் அதிகமானால் போட்டி முழுமையாக ரத்து செய்யப்படும். மைதானம் முழுவதும் மழை நீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. மைதானத்தை உலர வைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் போதுமான உபகரணங்களை வழங்கியுள்ளது. மழையிலிருந்து மைதானத்தை காக்க டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இருந்து அதிகளவிலான மழை கவர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
____________________________________________________________________________
கைரன் பொல்லார்ட் அபாரம்
முன்னாள் மே.இ.தீ. அணி வீரர் கைரன் பொல்லார்டு கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். முதலில் ஆடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் 187 /6 ரன்கள் அடித்தது. இந்த அணிக்கு டு பிளெஸ்ஸி கேப்டனாக இருக்கிறார். 188 ரன்கள் இலக்குடம் விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவரில் வெற்றி பெற்றது. இந்த அணிக்கு கைரன் பொல்லார்ட் கேப்டனாக இருக்கிறார். 19 பந்துகளில் 52 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இதில் 7 சிக்ஸர்கள் அடங்கும்.
கடைசி 12 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்படும்போது 19ஆவது ஓவரை மேத்திவ் போர்ட் வீச வந்தார். அவரது ஓவரில் 0,6,0,6,6,6 என மொத்தம் 24 ரன்கள் அடித்து பொல்லார்ட் அசத்தினார். 37 வயதிலும் அதிரடியாக விளையாடும் பொல்லார்ட்டின் இந்த விடியோ வைரலாகி வருகிறது. பொல்லார்ட் அணி புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடம் வகித்துள்ளது. பொல்லார்ட் மும்பை இந்தியன் அணியின் பயிற்சியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |