எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, இந்தியா - சீனா இடையே நேரடி விமான போக்குவரத்தை தொடங்குவது குறித்து சீன பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கொரோனா காலகட்டத்தின்போது இந்தியா மற்றும் சீனா இடையிலான நேரடி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது வரை இருநாடுகளுக்கு இடையே நேரடி விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில், சிவில் விமான போக்குவரத்து துறையில் இந்தியா-சீனா இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இருநாடுகளுக்கிடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்தும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஆசிய பசிபிக் மந்திரி மாநாட்டின்போது, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு மற்றும் பிற மூத்த அதிகாரிகள் ஆகியோர், சீனாவின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினர்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராம்மோகன் நாயுடு, இரு நாடுகளுக்கிடையிலான சிவில் விமானப் போக்குவரத்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல், திட்டமிடப்பட்ட பயணிகள் விமான சேவையை விரைவாக தொடங்குதல் ஆகியவை தொடர்பாக சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |