முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது நாள் ஆட்டமும் ரத்து

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      விளையாட்டு
Cricket--2024-09-12

ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியை ஆப்கானிஸ்தான் சார்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பம் முதலே மழைக் குறுக்கிட்டதால் டாஸ்கூட போடமுடியாத நிலை ஏற்பட்டது.

ஒருவேளை நேற்று (செப். 12) மழை குறைந்தால் இன்று 98 ஓவர்களுடன் 4-வது நாள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மழையின் தீவிரம் குறையாததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. மைதானம் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதால் மைதானத்தை உலர வைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் போதுமான உபகரணங்களை வழங்கியுள்ளது. மழையிலிருந்து மைதானத்தை காக்க தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இருந்து அதிகளவிலான மழை கவர்கள் கொண்டுவரப்பட்டன. இதுவரையிலும் 7 ஆட்டங்கள் மட்டும் மழையால் 5 நாள்களும் பாதிக்கப்பட்டு இருகின்றன.

ஆப்கான் அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 18-ம் தேதி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளது. 3 போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸ்மத்துல்லா ஷாகிடி தலைமையிலான அந்த அணியில் ரஷித் கான் மீண்டும் இடம்பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு:- ஹஸ்மத்துல்லா ஷாகிடி (கேப்டன்), ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகில், அப்துல் மாலிக், ரியாஸ் ஹசன், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், ரஷித் கான், நங்யால் கரோட்டி, அல்லா முகமது கசன்பர், பசல் ஹக் பரூக்கி, பிலால் சாமி, நவீத் ஜத்ரான் மற்றும் பரித் அகமது மாலிக்.

சென்னையில் இந்திய வீரர்கள் 

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. 

இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தனர். அணியில் உள்ள வீரர்கள் தனித்தனியாக இன்று இரவுக்குள் சென்னை வந்தடைவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர் நாளை முதல் பயிற்சியில் ஈடுபடுவார்கள். வங்காளதேச அணியினர் வருகிற 15-ந்தேதி டாக்காவில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து