Idhayam Matrimony

கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்த 10 பேர் குணமடைந்தனர்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      இந்தியா
Kerala 2024-09-13

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்த 10 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குதற்கு முன்னதாகவே பல்வேறு வித காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவ தொடங்கின. பருவமழை பெய்ய தொடங்கியதும் அவற்றின் பாதிப்பு மேலும் அதிகரித்தது. காய்ச்சல்களில் டெங்கு, மலேரியா, பன்றி மற்றும் எலிக்காய்ச்சல் மட்டுமின்றி நைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட அரிய வகை நோய்களும் பரவின. 

அமீபிக் மூளைக்காய்ச்சல் என்பது தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பவர்களுக்கு, அதில் வாழும் அமீபாக்கள் மூலம் ஏற்படுகிறது.அதாவது குளிப்பவர்களின் காதுமடல் மற்றும் நாசி துவாரத்தின் வழியாக மூளைக்கு சென்று அமீபா தாக்குகிறது. இதன் மூலம் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். 

இந்த காய்ச்சலுக்கு கேரளாவில் ஏராளமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதையடுத்து அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பும் வழிமுறைகளை அரசு தெரிவித்தது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளாக அசுத்தமான தண்ணீர் தேங்கியிருக்கக் கூடிய குளங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

இருந்தபோதிலும் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தனி வார்ட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் அமீபிக் மூளைக்காயச்சல் தொற்று பாதிப்புக்கு உள்ளான 10 பேர் பூரண குணமடைந்திருக்கிறார்கள். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் இதுவரை அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்த 14 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து