முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் குரூப் - 2 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது: 2,327 காலியிடங்களுக்கு 8 லட்சம் பேர் போட்டி

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      தமிழகம்
TNPSC 2022 12 20

சென்னை,  ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத்தேர்வு இன்று நடைபெறுகிறது. மொத்தம் 2,327 காலியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர், தலைமைச்செயலக உதவி பிரிவு அலுவலர், பாரஸ்டர் உள்ளிட்ட குரூப்-2பதவிகளில் 507 காலியிடங்களையும், அதே போல், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட குரூப்-2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்களையும் (மொத்தம் 2,327) நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏ, தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜுன் மாதம் வெளியிட்டது. 

முதல்கட்ட தேர்வான முதல்நிலைத்தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜுன் 20-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி முடிவடைந்தது.

பட்டப்படிப்பை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்ட குரூப்-2 தேர்வுக்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பித்தனர். இந்நிலையில், விண்ணப்பதாரர்களில் 7 லட்சத்து 93ஆயிரத்து 947 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எஸ்.கே. பிரபாகர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு குரூப் 2 முதல்நிலைத்தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 947 பேர் தேர்வெழுதுகின்றனர். தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. 

தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தேர்வுக்கூடத்துக்கு செல்லுமாறுதேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்வுக்கூடத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

 முதல்நிலைத்தேர்வில் இருந்து ஒரு காலியிடத்துக்கு 10 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் முதன்மைத்தேர்வுக்கு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 2,327 ஆக இருப்பதால் சுமார் 24 ஆயிரம் பேர் முதன்மைத்தேர்வெழுத தேர்வு செய்யப்படுவர். 

முதன்மைத்தேர்வு குரூப்-2 பணிகளுக்கு விரிவாக விடையளிக்கும் வகையிலும், குரூப்-2-ஏ பணிகளுக்கு அப்ஜெக்டிவ் முறையில் விடையளிக்கும் வகையிலும் அமைந்திருக்கும். இருவகை பணிகளுக்குமே நேர்முகத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து