முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1 லட்சம் கோடியில் தமிழகத்தில் 2,781 கி.மீ., தூரத்திற்கு 71 சாலைகளை அமைக்க திட்டம் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      தமிழகம்
Nitin-Gadkari-1 2024 09 13

Source: provided

கும்பகோணம் : தமிழகத்தில் ரூ. ஒரு லட்சம் கோடியில், 2,781 கி.மீ., தூரத்திற்கு, புதியதாக 71 சாலைகள் அமைக்கும் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் - கும்பகோணம் - விக்ரவாண்டி வரை உள்ள பிரதானச் சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஓரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டி முதல் தஞ்சாவூர் வரையிலான 165 கிலோ மீட்டாருக்குத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், நான்கு வழிச்சாலையாகக் கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கியது.

இதைத்தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரலில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், தனியார் ஒப்பந்தத்தின் மூலம், முதல் பிரிவாக விக்ரவாண்டி சேத்தியாத்தோப்பு வரை 66 கி.மீ தூரத்திற்கும்,. 2-ம் பிரிவாக சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம்-சோழபுரம் வரை ரூ.2356.19 கோடியில் 50.480 கி.மீ. நீளத்திலும், 3-ம் பிரிவுகளாகச் சோழபுரம் முதல் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் புளியந்தோப்பு வரை ரூ.2374.69 கோடி மதிப்பீட்டில் 47.835 கி.மீ. நீளத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி- சோத்தியாப்தோப்பு வரையிலான சாலைப் பணிகள் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டதால், மீதமுள்ள சேத்தியாத்தோப்பு முதல் தஞ்சாவூர் வரையிலான 2-ம் மற்றும் 3-ம் கட்டப் சாலைப் பணிகளை, மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கார் மூலம் புறவழிச்சாலையை ஆய்வு மேற்கொண்டவர், மூப்பக்கோயில் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டிருந்த அதன் வரைபடத்தைப் பார்வையிட்ட பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''தஞ்சாவூர் – விக்கரவாண்டி நான்கு வழிச்சாலை ரூ. 4,730 கோடி மதிப்பீட்டில், 164 கி.மீ.தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர்–சோழபுரம், சோழபுரம்– சேத்தியாதோப்பு வரையிலான சாலைப் பணிகள் 95 சதவீத நிறைவு பெற்றுள்ளது.

மொத்த திட்டத்தில் நில கையகப்படுத்துவதில், சிக்கல்கள் மற்றும் முக்கிய சுணக்கமாக இருந்ததால், ஒப்பந்தக்காரர்களால் இந்த சாலைப் பணியை முடிப்பதில் சிக்கல் உள்ளதாக, பணியை செய்ய முடியாத எனக் கூறி என்னை சந்தித்தனர். மேலும், சாலை அமைப்பதற்கான கட்டுமான மூல பொருட்கள் கிடைப்பதில் சில சிக்கல் இருந்தது. இது போன்ற கடினமான சூழலிலும் பணிகள் முடிந்துள்ளது. 

தற்போது, தேசிய நெடுஞ்சாலை மூலம் 10 புதிய சாலைகள் அமைப்பதற்காகத் திட்டம் 727 கி.மீ.தூரத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பில், கோவை – சத்தியமங்கலம், தூத்துக்குடி – கன்னியாகுமரி, ராமநாதபுரம் – ராமேஸ்வரம், ராமேஸ்வரம் – அரிச்சல்முனை, மதுரை – ராமேஸ்வரம், மங்களூர் – விழுப்புரம், மதுரை – தொண்டி, சேலம் – வாணியம்பாடி, மதுரை – தேனி உள்பட 10 ஊர்களுக்கு இடையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ரூ. ஒரு லட்சம் கோடியில், 2,781 கி.மீ., தூரத்திற்கு, புதியதாக 71 சாலைகள் அமைக்கும் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதே போல், 1,343 கி.மீ. தூரத்திற்கு. 68 சாலைத் திட்டங்கள் மூலம் ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் 2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 451 பல்வேறு சாலைத் திட்டங்கள் 9,300 கி.மீ. தூரத்திற்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பில், தமிழகம் முழுவதும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, அதிகமான முக்கியத்தும் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருவதுடன், தமிழக அரசும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை 4,975 சாலைகள் இருந்தது. 2014ம் ஆண்டுக்குப் பிறகு 6,806 சாலையாக உயர்ந்துள்ளது.

நாடுமுழுவதும் 5 லட்சம் கோடியில் மதிப்பீட்டில், 10 ஆயிரம் கி.மீ.தூரத்திற்கு 27 புதிய பசுமை வழிச் சாலை அமைய உள்ளது. தமிழகத்தில் 3 பசுமை வழிச்சாலை, 187 கி.மீ., நீளத்தில் ரூ.10 ஆயிரத்து 100 கோடி செலவில் அமைய உள்ளது எனத்தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து