முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த நிபந்தனைகள் என்ன?

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : டெல்லி கலால் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 155 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கினாலும், அவரால் முதல்வர் அலுவலகத்துக்குள் நுழைய முடியாது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அவர் "நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சுதந்திரத்தைப் பறிக்கும் அநியாயமான செயல்" என்று நீதிமன்றம் குறிப்பிட்டு, பிணை வழங்கி உத்தரவிட்டது.டெல்லி கலால் முறைகேடு வழக்கில் ஆறு மாதங்களாக அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டநிலையில், தற்போது சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததால் அவர் வெளியே வரவிருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட், அவருக்கு அளித்திருக்கும் நிபந்தனை ஜாமீனில், முதல்வர் அலுவலகம் செல்லவோ, கோப்புகளில் கையெழுத்திடவோ கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 லட்சம் பிணைப் பத்திரம், டெல்லி கலால் கொள்கை குறித்து பொதுவெளியில் கருத்துத்தெரிவிக்கக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு, வாரத்தில் இரண்டு நாள்கள் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறையில் இருந்து வெளியே வந்தாலும், அவரால் முதல்வர் பணிகளைத் தொடர முடியாது என்று தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து