முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. மீண்டும் ஒன்றாகும்: ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      தமிழகம்
OPS 2023-10-25

Source: provided

சென்னை : பெரியாரின் சமூக சீர்த்திருத்த கொள்கைகளை அ.தி.மு.க.வினர் பின்பற்றி வருகிறார்கள் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மீண்டும் ஒன்றாக மலரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது., 

தந்தை பெரியார் திராவிட இயக்கத்தின் தலைக் காவிரியாக இருந்து தமிழகத்தில் அனைவருக்கும் சம உரிமை கிடைப்பதற்கு வழிகாட்டியாக இருந்தார். பெரியாரின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். பெரியாரின் சமூக சீர்த்திருத்த கொள்கைகளை அதிமுகவினர் பின்பற்றி வருகிறார்கள்.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தபடி அதிமுக மீண்டும் மலரும். சசிகலா, டிடிவி தினகரன் உள்பட அதிமுக அணிகள் இணையும் காலம் வெகு தொலைவில் இல்லை. திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்தும் இந்த நவயுக நாடகத்திற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து