முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கோட் அணிய விலக்கு கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      இந்தியா
Chandrashut 2024-03-17

Source: provided

புதுடெல்லி : கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கோட் அணிய விலக்கு அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

கோடை காலங்களில் வழக்கறிஞர்கள் கருப்பு நிற கோட் மற்றும் அங்கி அணிந்து கோர்ட்க்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "வழக்கறிஞர்கள் கண்ணியமான உடையை அணிய வேண்டியது அவசியமாகிறது. நீங்கள் குர்த்தா, பைஜாமா அல்லது ஷார்ட்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து கொண்டு கோர்ட்டில் வாதாட முடியாது" என்று குறிப்பிட்டனர். 

மேலும் ராஜஸ்தானில் உள்ள தட்பவெப்ப நிலை பெங்களூருவில் இருப்பதில்லை என்பதால், அந்தந்த பார் கவுன்சில்கள் இது குறித்து முடிவெடுக்கட்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். அதோடு, வழக்கறிஞர்களின் உடை குறித்த விதிகளில் திருத்தங்கள் செய்வது தொடர்பாக பார் கவுன்சில் மற்றும் அரசாங்கத்திடம் மனுதாரர் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து