முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா வெள்ள பாதிப்பு: சிறப்பு நிவாரணம் அறிவித்தார் சந்திரபாபு

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      இந்தியா
Chandrababu-Naidu 2023-09-2

விஜயவாடா, ஆந்திராவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.

இது குறித்து தலைமை செயலகத்தில் அவர் கூறியதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள தரை தள பகுதி வீடுகளுக்கு தலா ரூ. 25 ஆயிரமும், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தரைதள மற்றும் முதல் மாடி வீடுகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்படும். மற்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட சிறுகடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரமும், ரூ. 40 லட்சம் வரவு, செலவு உள்ள பதிவு பெற்ற கடைகளுக்கு ரூ. 50 ஆயிரமும், ரூ. 40 லட்சத்திலிருந்து ரூ. 1.5 கோடி வரவு-செலவுள்ள வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. ஒரு லட்சமும், ரூ.1.5 கோடி வரவு, செலவுள்ள வணிக நிறுவனங்களுக்கு ரூ.1,50,000 வழங்கப்படும்.

மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இழப்பீடு ரூ. 9 ஆயிரமும், முழுவதுமாக பாதிக்கப்பட்டிருந்தால் ரூ. 20 ஆயிரமும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ. 6 ஆயிரமும், கால்நடைகள் இழப்பிற்கு ரூ. 50 ஆயிரமும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், ஒரு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து