முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரத்தில் வரும் 28-ம் தேதி தி.மு.க. பவளவிழா பொதுக்கூட்டம் : கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      தமிழகம்
CM-2-2024-09-17

Source: provided

சென்னை : காஞ்சிபுரத்தில் வரும் 28-ம் தேதி தி.மு.க. பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அனைத்துக் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை  ஆலோசனை நடத்தினார். அப்போது, வருகிற 28-ம் தேதி கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் தி.மு.க. தொடங்கிய நாள் என முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதைத் தொடர்ந்து தி.மு.க. பவளவிழா பொதுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ வரவேற்று பேசுகிறார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார். இதில் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். மேலும், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் காஞ்சியில் பவள விழா பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து