Idhayam Matrimony

மே.வங்க வெள்ளம்: தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க போகிறேன் : பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      இந்தியா
Mamtha 2024-03-20

Source: provided

கொல்கத்தா : ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வரும் தண்ணீரால் மேற்கு வங்காளத்தின் தெற்கு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தண்ணீரை ஒருதலைபட்சமாக விடுவிப்பதற்காக தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்ய மத்திய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.   மேலும், கடந்த 2009-க்கு பிறகு தாமோதர் பள்ளத்தாக்கு அணைகளில் இருந்து வரும் தண்ணீரால் மாநிலம் இப்போதுவரை மிகப்பெரிய வெள்ளத்தை எதிர்கொள்கிறது. இந்த விஷயத்தை நீங்கள் தீவிரமாக பரிசீலித்து, கணிசமான மத்திய நிதியை விடுவிப்பது தொடர்பாக அமைச்சகங்களுக்கு உத்தரவிடுமாறு நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக விரிவான வெள்ள மேலாண்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனுக்கு சொந்தமான மைத்தான் மற்றும் பஞ்செட் அணைகளின் ஒருங்கிணைந்த அமைப்பில் இருந்து கிட்டத்தட்ட 5 லட்சம் கன அடியில் திட்டமிடப்படாத மற்றும் ஒருதலைப்பட்சமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது இந்த பேரழிவிற்கு வழிவகுத்தது. இதனால் தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து