எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தனது மகன்களை தாக்கியதாக பிரபல பின்னணி பாடகர் மனோவின் மனைவி அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல சினிமா பின்னணி பாடகர் மனோவின் வீட்டின் முன்பு மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக் மற்றும் வீட்டு பணியாளர்கள் இருவர் மற்றும் 8-க்கும் மேற்பட்ட நபர்களை சேர்ந்த கும்பல்கள் தாக்கி கொண்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகின. மேலும் செல்போன் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்மையில் பாடகர் மனோவின் மகன்கள் தாக்கியதாக ஒரு தரப்பினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மனோவின் மகன்கள் மற்றும் உடன் இருந்த 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அதில் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மனோவின் மகன்கள் தற்போது வரை தலைமறைவாகி உள்ளனர். வீட்டு முன் நின்றவர்களை தாக்கியதாக மனோவின் மகன்கள் மீது ஏற்கனவே காவலர்கள் வழக்கு பதிந்தனர்.
இந்த நிலையில், மனோவின் மகன்களும் எதிர்தரப்பால் தாக்கப்பட்ட வீடியோ வெளியான நிலையில் சம்பவம் நடந்த அன்று மகன்களை தாக்கியதாகவும், தன்னையும் தாக்கியதாகவும் மனோவின் மனைவி ஜமீலா தற்போது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 8 பேர் மீது புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் தற்போது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், ஆபாச வார்த்தைகள் பேசுதல், கும்பலாக சேர்ந்து தாக்குதல் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |