முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் குடும்ப நல நிதியுதவி : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1  லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு, அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு, நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு மே தினத்தின்போது, நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நன்நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் அப்போது நிதியுதவி வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. 

இந்நிலையில்,  கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட 171 நலிந்த தொழிலாளர்ளுக்கு தலா ரூ. ஒரு  லட்சம் வீதம், மொத்தம் ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும். 

இவர்களுக்கான நிதியுதவி, கட்சியின் 53-ஆவது ஆண்டு தொடக்க நாளான வரும் 17-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு, எம்.ஜி.ஆர். மாளிகையில் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து