முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் புகழாரம்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவுச் சின்னங்களும் வரலாறும் அவர் முன்னெடுத்த உரிமைப்போரும் நமது சமூகநீதி முயற்சிகளுக்கு என்றும் ஊக்கமளிக்கட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு நாட்டு விடுதலைக்காக சிறை ஏகியவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இரட்டைக்குவளை எதிர்ப்பு மாநாடு உள்ளிட்ட பெரும் போராட்டங்களை முன்னெடுத்தவருமான தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாள்.

கடந்த ஆண்டு, அவரது நூற்றாண்டை முன்னிட்டு, இம்மானுவேல் சேகரனார் நல்லடக்கம் செய்யப்பட்ட பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது நமது திடாவிட மாடல் அரசு. 

அவரது நினைவுச் சின்னங்களும் வரலாறும் அவர் முன்னெடுத்த உரிமைப்போரும் நமது சமூகநீதி முயற்சிகளுக்கு என்றும் ஊக்கமளிக்கட்டும். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து