முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் விடாது பெய்த கன மழை; குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      தமிழகம்
Chembarambakkam 2023 06 20

சென்னை, திருவள்ளூரில் பெய்த கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வங்கக் கடலில் குறைந்த உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி  காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

மழை அதிகம் பெய்யும் வாய்ப்புள்ள பகுதிகளில் தேசிய, மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் கூடுதலாக பொக்லைன் இயந்திரங்களை நிலை நிறுத்த, நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. முக்கிய ஏரிகளின் நீர்வரத்து விவரம் பின்வருமாறு:

 புழல் ஏரிக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் 196 கன அடியாக இருந்த நிலையில், நேற்று 277 கன அடியாக அதிகரித்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நேற்று முன்தினம், நீர்வரத்து இல்லாத நிலையில் நேற்று 160 கன அடியாக அதிகரித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் 250 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 260 கன அடியாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கான நீர்வரத்து நேற்று 650 கன அடியாக அதிகரித்துள்ளது. வீராணம் ஏரிக்கான நீர்வரத்து நேற்று 1,423 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து