முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சனாதன தர்மத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சியில் புதிய அணி : பவன் கல்யாண் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      இந்தியா
Pawan-Kalyan 2023-10-05

Source: provided

அமராவதி : சனாதன தர்மத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சியில் நரசிம்ம வாராஹி படை எனும் பிரிவை பவன் கல்யாண் தொடங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.

 இது தொடர்பாக நடிகர் பவன் கல்யாண் கூறியதாவது, 

இந்து கோவில்களுக்குச் செல்லும் போதும், சனாதன தர்மத்தைப் பின்பற்றும்போதும் சில விஷயங்களை நாம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட்டிற்கு மட்டுமின்றி உலகிற்கே வழிகாட்டும் விளக்காக விளங்கும் சனாதன தர்மம் இல்லாமல் நம் நாடு இல்லை என்று என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். 

நாங்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை மதிக்கும் அதே சமயம், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் விளைவுகள் ஏற்படும் என்பதையும் உறுதி செய்வோம். இந்து மதத்தையோ, சனாதன தர்மத்தையோ கேலி செய்யும் வகையில்  வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை பொறுத்துக் கொள்ள முடியாது. 

 வலைதளங்களில் சனாதனம் குறித்து விமர்சிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். நரசிம்ம வாராஹி படையில் ஜன சேனானி என்று அழைக்கப்படும் ஜனசேனா உறுப்பினர்கள் சனாதன தர்மத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். 

இந்த புதிய பிரிவு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்து மத விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான கலாச்சார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து