முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி சிறப்பு பஸ் முன்பதிவில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      தமிழகம்
Bus 2023 04 18

Source: provided

சென்னை : தீபாவளி சிறப்பு பஸ் முன்பதிவில் அரசு விரைவு பஸ் போக்குவரத்துக் கழகம் புதிய சாதனை படைத்துள்ளது.

தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாட  சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சிறப்பு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். பயணிகளின் வசதிக்காக ஏராளமான சிறப்பு பஸ்களை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.

தற்போது தீபாவளி முடிந்து விட்டதால் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். அவர்களுக்கு என்று பிரத்யேக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி சிறப்பு பஸ் முன்பதிவில் அரசு விரைவு பஸ் போக்குவரத்துக் கழகம் புதிய சாதனை படைத்துள்ளது.

ஒரே நாளில் கிட்டத்தட்ட 75,000 பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பாகவே tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி இருந்தது. அதன் எதிரொலியாக ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கின்றனர்.

இந்த முன்பதிவு எண்ணிக்கை கடந்த காலங்களை விட மிக அதிகம். இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது என்று அரசு விரைவு பஸ் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறி உள்ளனர். 

இன்னமும் தீபாவளியை கொண்டாட ஊருக்குச் சென்ற ஆயிரக்கணக்கானோர் சென்னை திரும்பாமல் உள்ளனர். அடுத்து வரக்கூடிய நாட்களில் அவர்கள் திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து