எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவல் உடன் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய மாளவிகா 23-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் மாளவிகா மற்றொரு டென்மார்க் வீராங்கனையை எதிர்கொள்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
யங்க்கு தொடர் நாயகன் விருது
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். முடிவில் இந்தியா 2-வது இன்னிங்சில் 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி இந்தியாவை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து வீரர் வில் யங் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . அவர் இந்த தொடரில் 2 அரைசதம் உட்பட 244 ரன்கள் குவித்துள்ளார் இது தொடர்பாக பேசிய வில் யங் கூறியதாவது , இது மிகப்பெரியது. நான் எங்கு ஸ்கோர் செய்ய விரும்புகிறேன் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் மற்றும் என்னால் முடிந்தவரை அதைச் செய்ய வேண்டும். நான் எங்கு ஸ்கோர் செய்ய வேண்டும் என்று தெரிந்தது அதனால் மனது மிக தெளிவானது. ரன்கள் குவிக்க முடிந்தது . இது சிறப்பான உணர்வு .என தெரிவித்தார்
பாகிஸ்தான் அணி அறிவிப்பு
முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனைத்தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டிக்கான விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது.
இந்த அணிக்கு சல்மான் அலி ஆஹா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பாபர் அசாம், ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணி விவரம்; அப்துல்லா ஷபீக், சைம் அயூப், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கம்ரான் குலாம், சல்மான் அலி ஆஹா (துணை கேப்டன்), முகமது இர்பான் கான், ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராப், முகமது ஹஸ்னைன்.
செஸ் போட்டி அட்டவணை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ளும் 2-வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 5 முதல் 11 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்படுகிறது. இப்போட்டியின் மொத்த பரிசு தொகையான ரூ. 70 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட உள்ளது. இப்போட்டி 7 சுற்றுகள் கொண்டு ரவுண்டு ராபின் (Round Robin) முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்படும். இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் எரிகைசி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உள்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் பங்குபெற உள்ளார்கள்.
இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- எங்கள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 ஐ பெருமையுடன் அறிவிக்கிறது. சென்னையின் முதன்மையான செஸ் போட்டியின் இரண்டாவது பதிப்பான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 ஐ வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்வு நவம்பர் 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது. சிறந்த வீரர்கள் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் போட்டியிடுவார்கள், அவர்களின் விதிவிலக்கான திறமைகளை வெளிப்படுத்துவார்கள். சதுரங்க ஆர்வலர்கள் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.100 செலுத்தி தங்கள் இருக்கைகளைப் பாதுகாக்க அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Dec 2024சென்னை, ஸ்ரீவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது
26 Dec 2024சென்னை: மாணவி வன்கொடுமை வழக்கில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்.
-
சென்னை புத்தகக் கண்காட்சி: இன்று துவக்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி
26 Dec 2024சென்னை, வரும் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
சபரிமலை கோவில் மண்டல காலம் நிறைவு வரும் 30-ம் தேதி மீ்ண்டும் திறப்பு
26 Dec 2024திருவனந்தபுரம்: மண்டல காலம் நிறைவுவையொட்டி சபரிமலை கோவிலில் மீ்ண்டும் வருகிற 30-ம் தேதி நடை திறக்கப்படுகிறது.
-
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: தமிழகத்தில் 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
26 Dec 2024சென்னை: தமிழகத்தில் வருகிற 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாவக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
200 தொகுதிகளை தாண்டி வெல்லும் நிரந்தர கூட்டணி தி.மு.க. கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
26 Dec 2024சென்னை, “தி.மு.க.
-
நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரிவாக்கம்: மதுரை மற்றும் கோவை கோயில்களில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
26 Dec 2024சென்னை, கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை மதுரையில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மற்றும் கோவை மருதமலை முருகன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை கா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-12-2024.
26 Dec 2024 -
பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
26 Dec 2024புதுடெல்லி, பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2.6 ரிக்டர் அளவில் அரியானாவில் நிலநடுக்கம்
26 Dec 2024சண்டிகர், 2.6 ரிக்டர் அளவில் அரியானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்: 91 கவுண்டர்களில் பக்தர்கள் டோக்கன்கள் பெற ஏற்பாடு
26 Dec 2024திருமலை: திருப்பதி சொர்க்க வாசல் தரிசனத்திற்காக 91 கவுண்டர்களில் பக்தர்கள் டோக்கன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஆப்கானில் பலி 46 ஆக உயர்வு
26 Dec 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கொடூர தாக்குதலால் ஆப்கனில் பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.
-
வேட்டி, சேலைகளை ரேசன் கடைகளுக்கு ஜன.10-க்குள் அனுப்ப கைத்தறித்துறை உத்தரவு
26 Dec 2024சென்னை, பொங்கல் பண்டிக்கைக்கு வழங்க வேட்டி, சேலைகளை ரேசன் கடைகளுக்கு ஜன.10-க்குள் அனுப்ப கைத்தறித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் செருப்பு போட மாட்டேன் பா.ஜ.க. அண்ணாமலை பரபரப்பு பேட்டி
26 Dec 2024சென்னை: தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் இன்று முதல் 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன் என பா.ஜ.க.
-
கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது தாக்குதல் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கடும் கண்டனம்
26 Dec 2024வாஷிங்டன், கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யாவுக்கு அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மாணவி பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வழியுறுத்தல்
26 Dec 2024சென்னை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தி.மு.க. அரசின் பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
-
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதானவருக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை: அமைச்சர் பேட்டி
26 Dec 2024சென்னை: பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நபருக்கும், தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: தமிழக கவர்னர் ரவி அஞ்சலி
26 Dec 2024சென்னை, 20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நொச்சிக்குப்பம் கடற்கரையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
-
சுனாமி 20-ம் ஆண்டு நினைவு தினம்: புதுச்சேரி துணைநிலை கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி
26 Dec 2024புதுச்சேரி, சுனாமி 20-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கடலில் பால் ஊற்றி துணைநிலை கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
-
பல்கலை. மாணவி விவகாரம் எதிரொலி: புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு காவல்துறை கடும் கட்டுப்பாடு
26 Dec 2024குனியமுத்தூர், 2025 புத்தாண்டு பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய நகரமான கோவையும் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறது.
-
மத்திய பிரதேசத்தில் சோகம்: மின் கோபுரம் சரிந்து 3 பேர் பலி
26 Dec 2024போபால்: மத்திய பிரதேசத்தில் உயர் மின் கோபுரம் சரிந்து விபத்துக்குள்ளானதில் 3 தொழிலாளர்கள் பலி உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்.
-
ஒடிசாவில் மருத்து மாணவர் தற்கொலை
26 Dec 2024புவனேஸ்வர், ஒடிசாவில் நிதி நெருக்கடி காரணமாக மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்
26 Dec 2024திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
-
எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு கேரள அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு
26 Dec 2024திருவனந்தபுரம், புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு கேரள அரசு 2 நாள் துக்கம் அனுசரிக்க முடிவு செய்துள்ளது.
-
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
26 Dec 2024சென்னை, தி.மு.க. ஆட்சியின் அலட்சியத்தால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.