முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகள் புகார் எதிரொலி: மராட்டிய டி.ஜி.பி.யை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      இந்தியா
DGP 2024-11-04

Source: provided

மும்பை : எதிர்க்கட்சிகள் அளித்த புகாரை தொடர்ந்து மாநில டி.ஜி.பி. ரஷ்மி சுக்லாவை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மராட்டிய  அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

மராட்டிய சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 20-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன.

தேர்தலில் பா.ஜ.க. - காங்கிரஸ், சிவசேனா - உத்தவ் பாலாசாகேப் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சிகள் நேரடியாக மோதும் தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க.வும், மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரசும் அதிக தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 

அந்த வகையில் மொத்தம் உள்ள 288 இடங்களில் இந்த 2 கட்சிகளும் 74 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இந்நிலையில் மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் புகார்களைத் தொடர்ந்து அம்மாநில டி.ஜி.பி. ரஷ்மி சுக்லாவை உடனடியாக இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அம்மாநில அரசுக்கு நேற்று  உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தேர்தல் ஆணையம், டி.ஜி.பி.யை நியமனம் செய்ய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை இன்று பிற்பகலுக்குள் அனுப்புமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டம் ஒன்றில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் (சி.இ.சி.) ராஜீவ் குமார், அதிகாரிகள் பாரபட்சமற்றவர்களாகவும், நியாயமாகவும் நடந்து கொள்வது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது கட்சி சார்பற்றவர்களாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதாகவும், எதிர்கட்சிகளுக்கு எதிராக செயல்பட்டுவருவதாகவும் ரேஷ்மி சுக்லா மீது காங்கிரஸ்கட்சி புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து