முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 மாநில சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் 20-ம் தேதிக்கு மாற்றம் : தேர்தல் ஆணையம் உத்தரவு

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      இந்தியா
election-2024-08-16

Source: provided

புதுடெல்லி : கேரளா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

மகராஷ்டிரா மாநிலத்தில் வரும்  20-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது. வரும் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் 13 மற்றும் 20-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்படுகிறது. 

அதோடு, 48 சட்டமன்ற தொகுதிகள், கேரளாவில் ஒரு மக்களவை தொகுதிக்கு வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மகராஷ்டிராவில் ஒரு மக்களவை தொகுதி, உத்தரகாண்டில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தற்போது  கேரளா, பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் 14 சட்டமன்ற  தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது. 

சமூக, கலாச்சார பண்டிகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாக்குப்பதிவு சதவீதம் குறையக்கூடும் என அரசியல் கட்சிகள் வைத்த வேண்டுகோளை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 13-ம் தேதிக்கு பதிலாக வரும் 20-ம் தேதி நடைபெறும். அதே சமயம் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

அதன்படி, கேரள மாநில பாலக்காடு சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 13-ம் தேதிக்கு பதிலாக 20-ம் தேதி நடைபெறும். பஞ்சாப் மாநிலம் தேரா பாபா நானக் தொகுதி, சப்பெரிவால், கிட்டர்பாஹா, பர்னாலா தொகுதிகளிலும் வரும் 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். உத்தர பிரதேச மாநிலத்தின், மீராப்பூர், குண்டர்கி, காசியாபாத், காய்ர், கர்ஹால், சிஷாமௌ, புல்புர் கட்டெஹரி, மாஜவான் ஆகிய சட்டசபை தொகுதிகளிலும் வரும் 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

கேரள மாநிலம் பாலக்காடு சட்டசபை தொகுதி தேர்தல் முன்பு 13-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது வரும் 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேசமயம், வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் திட்டமிட்டபடி வரும் 13-ம் தேதியே நடைபெற உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து