முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் பயங்கரம்: எரிமலை வெடித்து 9 பேர் பலி

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      உலகம்
Indonesia 2024-11-04

ஜகார்த்தா, இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், லெவோடோபி லக்கி மலையில், நேற்று (நவ.,04) எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் இலே புரா மாவட்டத்தில் துலிபாலி கிராமம், நோபோ, நுரபெலன் மற்றும் ரியாங் ரீட்டா ஆகிய 4 கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த விபத்தில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், பலர் பலத்த காயமுற்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த சில வாரங்களில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட இரண்டாவது எரிமலை வெடிப்பு இதுவாகும். மேற்கு சுமத்ரா மாகாணத்தின் மவுண்ட் மராபி பகுதியில், அக்.,27ம் தேதி எரிமலை வெடித்தது. இதனால், அருகிலுள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் எந்த உயிரிழப்பும் அதிர்ஷ்டவசமாக ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து