முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் தொடரும் மழை: உதவி எண்கள் அறிவிப்பு

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      தமிழகம்
Raini-2024-05-20

Source: provided

சென்னை : நீலகிரியில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்திருக்கிறது. அக்., 1ம் தேதி முதல் நவ., 3ம் தேதி வரை மழை இயல்பை விட 19% அதிகமாக பெய்திருக்கிறது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 253.1 மி.மீ மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், தற்போது 301.1 மி.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. Toll free - 1077, 0423-2450034, 0423-2450035, வாட்ஸ்அப்- +91 9943126000.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து