முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்வோம்: ரஷ்யா

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      உலகம்
Trump-Putin-2024-11-07

வாஷிங்டன், டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்வோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. 

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு டிரம்ப் நிர்வாகம் வெளியுறவுக் கொள்கையில் எவ்வாறு செயல்பட இருக்கிறது என்பதை உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. 

தற்போது உக்ரைன்- ரஷ்யா இடையேயும், இஸ்ரேல்- காசா, இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையேயும் சண்டை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தனது வெற்றி உரையில் நாங்கள் சண்டையை தொடங்கப் போவதில்லை. சண்டையை நிறுத்த போகிறோம் எனத் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதனால் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டை முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்வோம். ஆனால் எங்களுடைய நிலைமைகள்  மாற்றப்படவில்லை. ரஷ்யா தங்கள்  நாட்டின் நலனில் உறுதியாக இருக்கிறது. 

உக்ரைன் மோதலில் தங்களுடைய இலக்கை அடையும் வகையில் செயல்படுவோம் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் உக்ரைனுக்கு எதிராக போர் தொடரும் என்பதை ரஷ்யா மறைமுகமாக தெரிவித்துள்ளது. 

உக்ரைனுக்கு அமெரிக்க மிகப் பெரிய அளவில் ஆயுதங்கள் வழங்கி வருகிறது. டொனால்டு டிரம்ப் அதிபரானதும்  இது தொடருமா? என்பது வைத்துதான் உக்ரைன்- ரஷ்யா போர் அடுத்த கட்டத்திற்கு செல்லும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து